இதுவரை,சப்தமில்லாமல் வந்து படித்துள்ளவர்கள் ....

Thursday 19 September 2013

இந்த தளத்தில் உள்ள கருத்துக்களை வேறு எங்கும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

பால் உணர்வு சார்ந்த அதாவது, செக்ஸ் செய்திகளை பொறுப்பா சொல்றதுக்கு நிறைய பேர் இல்லை என்றதால் – நாமே ஏன் இந்த சமூக  சேவையை அப்பப்ப செய்யக்கூடாது என்று தோன்றியது.

நிறைய செய்திகளை ஆழமாக நானே எனது பெயரில் நின்று சொன்னால் ஒரு கல்லூரி ஆசிரியர் என்னும்  முறையில் அது சரியாக வராது என்பதால் நான் உருவாக்கிய ஒரு கற்பனை கதாப்பாதிரம்தான் “அக்கா டார்லிங்.

எவ்வளவோ பார்த்தாச்சு சரி இதையும்தான் பார்த்துருவோமே என்று நினைச்சு இந்த கதையை எழுத துவங்குகிறேன்.

இந்த கதையை நானே முழுசா எழுதலாம்னு ஆசை......

அதலால் இது கதை எழுதும் விளையாட்டில் ஒரு பகுதி அல்ல.

அறிவியல் தமிழ் அறக்கட்டளை அதனுடைய அடிப்படை சொத்தின் மூலமாக வங்கியிலிருந்து வெளிப்படும் வருமானத்தை தழுவிதான் இயங்குகிறது.

நிறைய அறிவியல் தமிழ் மாணவர் பேச்சுப்போட்டி நடத்த திட்டங்கள் உள்ளது.

எனது காலத்துக்கு பிறகும் எனது சிந்தனைகள் வாழவேண்டும் என்று ஆசை...

எந்த ஒரு அமைப்புமே தனக்கு என்று ஒரு வருமானத்தை பெற்றால் மட்டுமே மற்றவரை சாராமல் அதனால் இயங்க முடியும்.

மற்றவர்களிடம் பண உதவி கேட்காமலேயே எனது நிறுவனத்தை எப்போதும் நடத்த வேண்டும் என்பது எனது தீர்க்கமான முடிவு.

“அக்கா டார்லிங் கதை ஒரு அளவை அடைந்ததிற்கு பிறகு அதை ஒரு மின்னூலாக வெளியிட்டு, அதன் மூலம் வரும் பொருள் அறிவியல் தமிழ் மன்றத்தை அடையும் வகையில் திட்டம் உள்ளது.

கூகுள் குழும நண்பர்கள், முகநூல் நண்பர்கள் எனது அன்பிற்கு உரியவர்கள்....

ஆகையால் இந்த கதை எழுதப்படும்பொழுது அது அனைத்து குழுமத்திலும் தாராளமாக இலவசமாக பகிர்ந்து கொள்ளப்படும்.

நூலாக வெளியான பிறகு – தளத்தில் உள்ள இலவச பகுதிகள் அகற்றப்படும்.

ஆகையினால், அருள் கூர்ந்து, யாரும் இந்த தளத்தில் உள்ள கருத்துக்களை வேறு எங்கும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

The E Book derived from the story line will be a source of Income and will generate the Corpus Fund for Free Activities related to Tamil Language Development.


Down the timeline, the Scientific Tamil Foundation will be generating its own wealth for its own sustenance, and will never appraoch any organisation or individual for any sort of assistance.


Self sustaining Module will allow any institute to thrive against the tide of time.


For I want my ideology to thrive even without me and after me.


டாக்டர்.மு.செம்மல் 

No comments:

Post a Comment