இதுவரை,சப்தமில்லாமல் வந்து படித்துள்ளவர்கள் ....

Thursday 10 April 2014

அக்கா டார்லிங் சுட்ட படம்



Saturday 16 November 2013

இனியும் வாழ்வர்....


ஒரு செயல்பாட்டின் விளைவு என்ன ?

ஒரு நிகழ்வின் அடிப்படை என்ன என்று தெரியாமலேயே அந்த நிகழ்வினை செய்வது முட்டாள்தனம் என்றால் ........

இவ்வுகளில் பலகோடி முட்டாள்கள் காலம் காலமாக வாழ்ந்துகொண்டே உள்ளார்கள்....

இனியும் வாழ்வர்....  

காமம் பற்றிய புரிதல் இல்லாமலேயே...... 

காமத்தை பின்தொடர்ந்து கெட்டழிந்து மறைந்த மக்களுக்கு இந்த தளம் காணிக்கையாகிறது.


டாக்டர்.மு.செம்மல்  

Friday 27 September 2013

ஆண்களும் பெண்களும் சமூகத்தின் இரண்டு தவிர்க்கமுடியாத பகுதிகள்.
ஆகையினால் இவர்களுள் யார் நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற விவாதம் தேவையற்றது.

இறைவன் அல்லது இயற்கை அல்லது இயற்கையை படைத்த இறைவன், மனிதர்களை சில அடிப்படை இயல்புகளுடன் படைத்துள்ளான்.
பத்து வயதுச் சிறுவர்கள் கூட நம்பத்தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை
விஸ்வாமித்திரர் ஒரு பெண்ணோடு உடல் உறவு கொண்டதை ஏற்கும் நமது சமூகம், இந்த வரியையும் ஏற்கும்.
எல்லாத்துக்கும் சின்னவன்; ஆனா, கல்யாணத்துக்கு மட்டும் பெரியவன்என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. இது பற்றிய அறிவால்தான் நம் பெரியவர்கள் ஆம்பளப் பசங்களோட வெளையாண்டா, காது அறுந்து போகும்என்று பெண் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தார்கள் போலும்.
ஆதிகாலத்தில் நமது முன்னோர் பிள்ளைகளை சொல்லி வளர்த்த முறை தவறு – இப்படியான சொற்றொடர்களை இணையத்தின் உள்ளே நுழைப்பது – பழமைத்தனம்.

 ஒரு பெண்ணோடு பழகும் போது இவள் ஒரு பெண்’  என்கிற நினைவையும் நினைப்பையும் அகற்றி அவளை ஒரு நண்பணைப் பார்ப்பது போல் ஒரு தோழியாக மட்டுமே பார்ப்பவர் ஆண்களில் அரிது என்பதே கசப்பான உண்மை. 
இந்த வரியை கொஞ்சம் மாற்றி,
 ஒரு ஆணோடு பழகும் போது இவன் ஒரு ஆண்’  என்கிற நினைவையும் நினைப்பையும் அகற்றி அவனை ஒரு தோழியாக  பார்ப்பது போல் ஒரு நண்பனாக மட்டுமே பார்ப்பவர் பெண்களில்  அரிது என்பதே கசப்பான உண்மை. 
என்று நான் எழுதினால் , என்னை சமூகம் சும்மா விடுமா ?

ஆண்  இவ்விஷயத்தில் தந்திரமானவன்
ஆண் பெண் இருவருக்கும் காம உணர்வு உள்ளது, ஆண்கள் அந்த உணர்வினை வெளிப்படுத்துவதில் முந்திக்கொள்ள முயல்வார்கள். பல சமயங்களில் இவ்வாறு முந்தும் ஆண்களை பெண்கள் விரும்பி ஏற்பர். முந்தாத ஆண்களை பொதுவாக பெண்கள் குறைவான ஆண்மை உள்ளவர்களாக எண்ணுவர்.

தோதான வாய்ப்பின் போது, எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான்!
மனித சமூகம் பார்ப்பதற்கு மிகவும் நாகரீமகாக  இருப்பினும் அதன் துவக்கம் மிகவும் மோசமானதாகத்தான் இருந்துள்ளது. முடிவும் அப்படியே இருக்குமோ என்று அச்சமாக உள்ளது.
ஏற்கனவே உலக அளவில், ஓர் இனச்சேர்க்கை பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் – அந்த பழக்கம் இந்தியர்களிடையே மெதுவாக பரவி வரும் சூழலில் – ஆண்களையும் பெண்களும் இன்புற்று இருப்பதை ஊக்குவிக்கும் படைப்புகள் தேவை.

ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் காழ்ப்புணர்வுடன் எதிர்கொள்வது ஓர்  இனச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக போய்விட வாய்ப்பு உள்ளது.

Tuesday 24 September 2013

ஆங்காங்கே பேசிக்கொண்டுதான் உள்ளோம்.......

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அறையின் வாயிலில் ஒரு குரல் கேட்டது,உள்ளே வரலாமா மேடம் ?

“வாருங்கள் – உங்களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன், என்ன மதிய நேரம் வரை ஆளையே காணோம் என்று அன்புடன் விசாரித்தார் அக்கா டார்லிங்.

அறையினுள் நுழைந்தார் சுவாமி அருணகிரி.

“காலையில் அனைத்து மத இறைவணக்கம் செய்து முடித்து, நூலகம் சென்று நீங்கள் சொன்ன கட்டுரையை தேடிப் பிடித்து, படித்து வருவதற்கு இவ்வளவு நேரம் ஆகியது மேடம். உங்களுக்குத்தான் இதுபோன்ற புண்ணிய செயல்பாடுகள் செய்யவேண்டிய கவலை இல்லையே – நேராக வந்துவிடுவீர்கள்

.....அக்காவின் நாத்தீகத்தன்மையை மென்மையாகக்  குத்தினார் சுவாமி அருணகிரி.

சாமி, எனக்குத்தான் எந்த முட்டாள்தனமான செயல்பாட்டிலும் நம்பிக்கை இல்லையே, அப்பறம் எப்படி நான்......அதை...... நறுக்கென்றார் அக்கா.

இவர்தான் சுவாமி அருணகிரி, நான் எப்படி இந்திய நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாக இங்கு கைதிகளின் உளவியல் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேனோ அதுபோல அவரும் ஒரு ஆய்வினை மேற்கொண்டுள்ளார் என்று அருணகிரியை அறிமுகம் செய்துவைத்தார் அக்கா டார்லிங்.

“நீங்கதான் இன்ஸ்பெக்டர் வீரபாண்டி அவர்களா ?, உங்களைப்பற்றி டி.ஜி.பி நிறைய சொல்லியுள்ளார், இங்குள்ள வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கடவுள் நம்பிக்கையை வைத்து நல்வழிப்படுத்த முடியுமா ? என்பதுபற்றி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளேன். 

முறைப்படி எனக்கு கொடுக்கப்பட்ட அரசு ஆணையை நாளை உங்களிடம் சமர்பிக்க உள்ளேன் என்று கூறி முடித்தார் அருணகிரி.

“பாஸ், இந்த சாமியாருக்கு சனி ஆரம்பித்து விட்டது, அக்கா டார்லிங் கூட சேர்ந்து  குழம்பி போய் இவனும் நாத்திகவாதி ஆகப்போறான் பாருங்க, செத்தாரு சாமி வீரபாண்டியின் காதுகளை கடித்தார் முருகன்.

அவனவனுக்கு எப்போ கெட்ட நேரம்  யாரால வரும்னு எப்படி தெரியும், நாம படுற அவஸ்தையை, சாமி கொஞ்ச நாளைக்கு படட்டும் என்று ஆசீர்வதித்தார் வீரபாண்டி.             
நீங்களும் எங்கள் விவாதத்தில் பங்கேற்கலாம், இன்ஸ்பெக்டர் சார். என்று அழைத்தவாறு தனது கையில் இருந்த குறிப்புகளை மேஜை மீது எடுத்து வைத்தார் அக்கா டார்லிங்.

சிக்மண்ட் பிராய்ட் தனது கடிதத்தில் ஒரு பகுதியில் “ஆயுதங்களின் வருகைக்கு பின்னர், முரட்டு பலம் தனக்குரிய இடத்தை இழந்தது, மனித இனத்தில் முதல் முறையாக மூளையின் தாக்கம், மதிநுட்பம் முக்கியத்துவத்தை பெற்றது. ஆனால் மனிதர்கள் எதற்காக சண்டை போட்டார்களோ அந்த நோக்கம் சற்றும் மாறவில்லை. 

ஏதேனும் ஒரு உரிமைக்கோரிக்கையை எதிர் அணியில் இருப்பவர் கைவிடும்படி செய்ய அல்லது அதுவரை மறுத்துவந்த  ஒரு கோட்பாட்டினை ஒரு அணியினர் ஏற்கவைக்க மக்களுக்கு ஊரு விளைவித்து, அல்லது எதிர் அணியில் உள்ளவர்களை வலுவிழந்து போகும்படி செய்து அதன் பிறகு அவர்களை அடக்குவது என்பதுதான் அந்த நோக்கம்.

எதிரணியில் உள்ளவர்களை திட்டவட்டமாக செயல் இழந்துபோக வைப்பது, அதாவது கருணையின்றி எதிர் அணியில் உள்ளவர்களை கொன்றுவிடுவது இந்த நோக்கை ஈடேற உதவியதுஎன்று அக்கா டார்லிங் கூறினார்.

                         Saint Bartholomew's Day Massacre -

இந்தப்  படம் விக்கிபீடியா தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது 

 “மேடம், இந்த அடிப்படையை தெரிந்துகொள்ள சிக்மண்ட் பிராய்ட் எதற்கு தேவை, நமது இதிகாசங்களில் நிகழ்ந்த மகாபாரத யுத்தத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அசைபோடுவது இந்த செய்திகளை இயம்புமே என்று கூறினார் அருணகிரி.

“சார், நாலாயிரம் வருட அசைபோடுதல் தேவையா? நம் சொந்தங்களை இலங்கையில் ஈவு இரக்கமின்றி இலங்கை ராணுவம் கொன்ற பொழுது இதுபோன்ற ஒரு வெறித்தனம் நிகழ்ந்தது என்று ஏன் கூறக்கூடாது, மக்களுக்கு பழங்கதைகளை கற்றுக்கொடுப்பதைவிட யதார்த்த வாழ்வில் நிகழும் குற்றங்களை பற்றி ஞாபகப்படுத்தினால் குறைந்த அளவிலாவது இனஉணர்வு மக்களிடையே வருமல்லவாஎன்றார் அக்கா டார்லிங்.

“இதுதான் உங்ககிட்ட பெரிய பிரச்சனை மேடம், நீங்க பாட்டுக்க, இலங்கை தமிழர்களின் துன்பங்களை பற்றி பேசுகிறீர்கள், நாங்கள் அப்படி செய்ய மாட்டோம் – இன்றுகூட மத வழிபாடுத்  தளங்களில் இந்துமத குருக்கள் இராமாயணயுத்தம் பற்றி கோயில்களில் பேசுவார்கள், கிருத்துவ பாதிரியார்கள் பைபிலில் உள்ள  போர் நிகழ்வுகளை பற்றி, நல்லவர்கள் பட்ட துன்பங்கள் பற்றி தேவாலயங்களில் பேசுவார்கள், இஸ்லாமிய இமாம்கள் வெள்ளிக்கிழமை பிரசங்கத்தில் சஹாபாக்களின் தியாகங்கள் பற்றி பேசுவார்கள்.

ஆனால், நீங்கள் சென்ற வாரம் நடந்த சர்வசமய பிரார்த்தனையின் பொழுது ஏன் தமிழ்நாட்டில் உள்ள இந்த மத சடங்குகளின் பொழுது இலங்கையில் தமிழர்கள் அடைந்த துயரம் பற்றி பேசுவதில்லை ? என்று ஒரே போடாக போட்டீர்கள், உங்களுக்கு தைரியம் இருக்கு இப்படியெல்லாம் பேச, இவ்வாறு பேசினால் அது வன்முறையை தூண்டுவதாக ஆகாதா ? என்றார் சுவாமி அருணகிரி.


“என்ன சார், வன்முறை வந்துவிடும் ? - இங்குள்ள தமிழர்களின் இரத்த சொந்தம் தானே இலங்கையில் உள்ளவர்கள், ஒரு குடும்பத்தில் உள்ள  ஒரு பகுதியினர் துன்புறுவதை நினைவு கூர்வது வன்முறையை தூண்டுவதாக ஆகுமா ?

“நாங்கள் என்றோ  நடந்த அநியாயத்தை பற்றி பேசுகிறோம், நீங்கள் இன்று நடப்பதை பற்றி பேசுகிறீர்கள்?, அதை நாங்கள் பாதுகாப்பாக விட்டுவிடுவோம். 

நாங்கள் வெறுமனே அந்த நேரத்துக்கு மக்கள் உணர்வு பெறவேண்டும் என்ற காரணத்தை மனதில் வைத்து செயல்படுவோம்.


 வீரமாக பேசுவது போலவும் இருக்கும்,அமைதியாக கேட்பது போலவும் இருக்கும் - சமீபத்திய செய்திகளை வேண்டுமென்றே தொடாமல் பாதுகாப்பாக பேசுவோம் என்று விளக்கினார் சுவாமி   

இது இரண்டு நிலை இல்லையா , கடவுளை ஏற்கும் நீங்கள் இப்படி செய்யலாமா என்றார் அக்கா டார்லிங் 


“இதனால்தான் சார், கடவுள் நம்பிக்கையாளர்களை நான் அதிகம் நம்புவதில்லை என்று நறுக்கென்று கொட்டினார் அக்கா டார்லிங்.

“ஆங்காங்கே பேசிக்கொண்டுதான் உள்ளோம் மேடம். தனது நிலையை தர்காத்தார் சுவாமி அருணகிரி.


“எங்கெங்கும் பேச வேண்டும் சார் சற்று கோபத்துடன் முடித்தார் அக்கா டார்லிங்.  

Monday 23 September 2013

அக்கா டார்லிங் பற்றி உலகத் தமிழர்களின் கருத்துக்கள்


               அக்கா டார்லிங் கதாப்பாத்திரம் 

தோற்றம் - 13:07 - 200913 

மறைவு - 

      அக்கா டார்லிங் என்று நான் கதை எழுத துவங்கியது என்னை உன்னிப்பாக கவனிக்கும் இணையத்தில் உள்ள பெரியவர்களை முகம்சுளிக்க வைத்துள்ளதை நான் அறிவேன்.

       இன்றைய தமிழ் இணைய உலகத்தில் நிறைய பகுதிகள் சீராக வேண்டும்.

“நீ என்னை புகழ்ந்தால் , நான் உன்னை புகழ்வேன்”

“எனது கடிதத்துக்கு நீ பதில் தரவில்லையென்றால் நானும் உனக்கு பதில் தர மாட்டேன்”  

“ஒரு செய்தியை எழுதிவைத்துக்கொண்டு அனைத்து நண்பர்களின் இழையிலும் அதனை தினமும் பதிவு செய்து உங்களுக்காகவே அதனை உருவாக்கினேன் என்று உங்களை நம்ப வைப்பேன்”

“தனி இழையில் பேசி வைத்துக்கொண்டு ; குழுமத்தில் வந்து ஒருவரை திட்டமிட்டு  நோகடிப்பது”

இப்படியே ,பல பல குறைகள் நம்மிடையே உள்ளது.

      ஒரு மிகவும் வித்தியாசமான சிந்தனை மாற்றத்தை தமிழ் இணைய உலகினில் உருவாக்க வேண்டும் என்ற காரணத்தால் தான் இந்த கதையை நான் எழுத துவங்கினேன். 
      நான் படைத்த அக்கா டார்லிங் , தனக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு பெரிய அணிகளை சேர்ப்பாள்.

இறுதியில் எல்லாம் தமிழுக்கு சுகமாய் முடியும். 

      அக்கா டார்லிங் பற்றி உங்கள் மனதில் என்ன தோன்றினாலும் இங்கு தயக்கமின்றி பதிவு செய்யவும்.

    தமிழ் உலகினில் முதல் முறையாக ஒரு பெண் மருத்துவர் ஆழமான உளவியல் பேசி வாழவைக்கும் கதை இது.

 


  உளமருத்துவம் என்னும் அறிவுச்சுரங்கத்தின் கதவுகளை உடைத்து திறக்கும் முயற்சி இது.
  
---------------------------------------------------------------------------------------------------------------------------
அக்கா டர்லிங்கை  முதன்முதலாக நான் அறிமுகம் செய்தது - 200913

அக்கா டார்லிங்......

Neurobiology of Sex in Tamil

பதினெட்டு வயதை அடையாத மாணவர்கள் இந்த தளத்தின் உள்ளே வர வேண்டாம். 
கண்டிப்பாக பதினெட்டு வயதை தாண்டியவர்கள் மட்டுமே இந்த தளத்தின் உள்ளே வரவும்.....
சின்ன வயசு பசங்க தேவையில்லாம ஆசைப்பட்டு உள்ளே வந்து, அக்கா டார்லிங் சொல்றதையெல்லாம் கேட்டு டென்ஷன் ஆனா, அதுக்கு அக்கா டார்லிங் பொறுப்பல்ல......

ரொம்ப வயசானவங்க நைசா வந்து, அமைதியாக நின்னு, 
அக்காவுடைய கருத்து மழையில் நனைஞ்சு அதனால - சளி பிடித்து - தும்மி  பயங்கரமாக மாட்டிக்கொண்டால் , அதுக்கம் அக்கா டார்லிங் பொறுப்பல்ல...... 

அக்காவை எங்கும் கோர்த்து விட்டுடாதீங்கப்பா......
ராவோட ராவா வந்து  பின் வரிசையில இருட்டுல உட்கார்ந்து  சத்தம் போடாம,அக்கா டார்லிங் சொல்றத கேட்டு  அமைதியா  கழன்று விடுவது உத்தமம்.

Press the link if you are above 18 Years Old.
http://sexeducationintamil.blogspot.in/

---------------------------------------------------------------------------------------------------------------------------
210913

நண்பர்களே,

நேசமா எனக்கு ஒண்ணு புரியல....... 
   
திருக்குறள் ஒரு நரம்பியல் நூல் என்று ஒரு 

வலைப்பதிவு  செய்தேன்....

நாளைய உலகில் நரம்பியல் ஆய்வு அறிஞர்கள் திருக்குறளை 

ஏற்கவேண்டும் என்பது சாதாரண செய்தி அல்ல..... 


எவ்வளவு முக்கிய பதிவு அது......


யாரும் கண்டுகொள்ளவில்லை.....

அக்கா டார்லிங் என்று ஒரு வலைப்பதிவை துவங்கி ஒரே நாளில்
892 பார்வைகள் கிட்டியுள்ளது.

என்ன செய்ய.......

சற்று முன்னர் மேலும் 360 வார்த்தைகள் சேர, அக்கா வீறு நடை போடுகிறாள்....

நான் உருவாக்கிய கற்பனை கதாப்பாத்திரம்  - அக்கா டார்லிங்....

அவளே என்னை பார்த்து நக்கலாகச்சிரிப்பது போல எனக்கு தோன்றுகிறது....

எனது கற்பனையே என்னை சிந்திக்க வைப்பது......

விசித்திரமான சூழல் இது....    
---------------------------------------------------------------------------------------------------------------------------
வேறு என்ன செய்வது டாக்டர் செம்மல், 

ஹ்ம்ம். ...

திரைப்படப்பாடல் வழி அறிவியல் செய்தி சொன்னால் ஒடி வந்து அறிவை வளர்த்துக் கொள்வோம்.

அக்கா டார்லிங் Neurobiology of Sex  சொல்லிக்கொடுத்தால்தான்  அறிவியல் புரிகிறது.

அதிலேயும் 18 வயதிற்கு மேல்தான் அனுமதி என்றதும் ஆர்வம் அநியாயமாகத் தூண்டப்பட்டுவிட்டது.

892 >> 928 ஆகிவிட்டது அதற்குள்.

எங்களைப் போன்ற வாசகர்களின் உளவியல் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.

வாழ்க அக்கா டார்லிங் 

..... தேமொழி - வல்லமை - 220913 
---------------------------------------------------------------------------------------------------------------------------

செய்யுங்க..செய்யுங்க..

உங்க வழி தனி வழி :-)

நா.கண்ணன் - மலேசியா - மின்தமிழ் 220913

---------------------------------------------------------------------------------------------------------------------------
பொதுவா ஸ்கூல் புத்தகத்தை படிப்பதுன்னா அலறுவதும், கதைபுத்தகம் படிப்பதுன்னா ஆர்வத்துடன் இருப்பதுவும் மக்கள் இயல்பு.

அக்கா டார்லிங் பதிவை இன்னும் படிக்கலை. இளையதலைமுறைக்கு கட்டாயம் உதவியாக இருக்கும் என தோன்றுகிறது. மருத்துவரின் முயற்சிக்கு என் நல்வாழ்த்துக்கள்

செல்வன் - அமெரிக்கா - மின்தமிழ் - 230913

---------------------------------------------------------------------------------------------------------------------------
சுவாரசியமாக உள்ளது. யூ டியூப் வினாவிடைகளும் அருமையாக உள்ளன. பயனுள்ள பதிவு. தொடர வாழ்த்துகள். 

நாங்களும் தொடர்கிறோம்.

நல்ல செய்திகள், நாட்டுக்கு நலம் பயக்கும் செய்திகளை வாழ்த்தி வரவேற்பதில் ஆண் பெண் வேறுபாடு தேவை என்று நான் நினைக்கவில்லை. நான் குமுதம் இதழில் எழுதிய கட்டுரையின் இணைப்பை இங்கு கொடுத்துள்ளேன். இன்னும் எழுத நினைத்துள்ளேன். நேரமின்மையால்..... எழுதாமல் உள்ளேன்.  எல்லா வளமும் உள்ள மொழி, எல்லாம் சொன்ன இனம் நம் இனம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

அறியாத தகவல்கள். தொடரட்டும்.

ஆதிரா - வல்லமை - 220913
---------------------------------------------------------------------------------------------------------------------------
பாஸ், எனக்கு அக்கா டார்லிங் பாத்திரம் ரொம்ப பிடிச்சிருக்கு.

தேமொழி - வல்லமை 230913

---------------------------------------------------------------------------------------------------------------------------

அக்கா டார்லிங்” - 18+க்கு இந்த பேர் அவசியமா? கன்றாவியா இருக்கு, ஒழுங்கா பேரை மாத்துங்க. 

அச்சு - பண்புடன் - 200913

---------------------------------------------------------------------------------------------------------------------------

நாளைய தமிழை யாராவது ப்ளாக் பண்ணுங்க
இவரது செக்ஸ் எஜுகேஷன் தேவை இல்லை.
இங்கே இருக்கும் எல்லோரும் முதிர்ச்சி அடைந்தவர்கள். இது தேவை இல்லை

ஜெய் ஷங்கர்  - பண்புடன் - 220913

---------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெய்சங்கர்,
பலர் அவரை ஃபில்டரில் போட்டிருக்கோம். நீங்க பின்னூட்டம் போடுறதால அவரோட மடல் எங்களுக்கும் வருது.
ஒன்னு அவரை ஃபில்டரில் போட்டிடுங்க, அல்லது ரிப்ளை பண்ணாதிங்க.
#வேண்டுகோள் மட்டும்.
ரமேஷ் முருகன் - பண்புடன் - 220913
---------------------------------------------------------------------------------------------------------------------------
வேலை வெட்டி ஏதுமின்றி பொறுமையாக வாசித்தவகையில் இதைவிட மொக்கையாக செக்ஸ் எஜூகேசனை எழுத முடியாதென்று தெரிந்து கொள்ள முடிந்தது. அன்பரே, உங்கள் எழுத்துகள் மிகவும் வறட்சியாக இருக்கிறது. கிளுகிளுப்பாக எழுதக் கற்றுக் கொண்டு பிறகு எந்த கருமத்தை வேண்டுமானாலும் இங்கு கற்றுக்கொடுக்க வாருங்களேன்.. தேவையெனில் தகுந்த குறிச்சொல் இட்டு தேடி, இணையத்தில் கிடைக்கும் கதைகளைப் படித்துப் பாருங்கள். அல்லது சென்னையில் வாலிபவிருந்து, விருந்து, இன்பநிலா பத்திரிகைகளை தேடிப் படியுங்கள்.

தங்களுக்கு ஜெயமுண்டாகட்டும்!

சென்ஷி - பண்புடன் - 230913
---------------------------------------------------------------------------------------------------------------------------




Sunday 22 September 2013

மனித ஆக்கிரமிப்பு உணர்வை ஒருமுகப்படுத்த முடியுமா ?

அக்கா டார்லிங்குடைய  அறைக்குள் செல்லவே  வீரபாண்டியனுக்கும் , முருகனுக்கும் மிகவும் அச்சமாக இருந்தது .....

டேய் , முருகா - இந்த அக்கா ரொம்ப சாதுர்யமான டாக்டர்டா, நம்ம முகத்தை பார்த்தே நம்முடைய கள்ள ஆட்டத்தை தெரிந்துகொள்வார்.

என்ன சார் செய்வது , வாங்க ஒரு டீ சாப்பிட்டுவிட்டு செல்வோம், அவங்க என்ன கேட்டாலும்  பிடி கொடுக்காமல் பேசுங்க...

கொஞ்சம் அசந்தாலும் நாம செஞ்ச தப்பயெல்லாம்  இந்த அக்கா கண்டுபிடுச்சுரும்.... என்று   வீரபாண்டியை வழிநடத்தினான் முருகன்  

இருவரும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

டாக்டர் அறியாள் , என்னும் அக்கா டார்லிங் பல நூல்களுக்கு இடையே ஆழ்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்தார்.

என்னங்க , பாண்டி ? - ரெண்டு நண்பர்களும் ஒன்றாக வர்றீங்க ?

இரண்டு தகுதிப்பாட்டில் உள்ள இரண்டு போலீஸ் காரர்கள் ஒன்றாக வந்தால் எனக்கு சந்தேகம் வருது ....

மேடம், என்ன புத்தகம் படித்துக்கொண்டு உள்ளீர்கள் ? என்று பேச்சுக்கொடுத்து பேச்சை வழிமாற்றினார் வீரபாண்டி 

1932 ஆம் ஆண்டு , ஜூலை 30ஆம் தேதி "உளவியல் பகுப்பாய்வின் தந்தை" என்றும்  "இயல்புணர்ச்சிகளின்  உலகில் ஓர் வல்லுநர்" என்றும் போற்றப்படும் , சிக்மண்ட் பிராய்ட்  (மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939)  




ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்க்கு  எழுதிய கவலை தோய்ந்த கடிதங்களின் நகலை படித்துக்கொண்டு உள்ளேன்.



ரெண்டு பேரும் , வேறு வேறு துறை சார்ந்தவர்கள் ... அவர்களுக்குள் கடித தொடர்பா ?

ஏன் இருக்கக்கூடாதா ?

அவர்களுக்குள் என்ன தொடர்பு இருந்திருக்க முடியும் , என்று கேட்டான் முருகன்.

போர் அச்சுறுத்தலிலிருந்து  மனித குலத்தை விடுவிக்க வழி ஏதேனும் உள்ளதா ? 

மனிதர்களிடையே நிலவும் பகைமை , அழிவு போன்ற தூண்டுதல்களில் இருந்து மக்களை காப்பாற்ற உதவுகின்ற வகையில் மனித ஆக்கிரமிப்பு உணர்வை ஒருமுகப்படுத்த முடியுமா ? 

என்று கேள்வி எழுப்பி சிக்மண்ட் பிராய்ட் அந்த கடிதத்தை எழுதினார் .

அதற்கு என்ன தேவை இருந்தது ? என்று கேட்டார் முருகன்.

அந்த காலத்தில் ஐரோப்பாவில் பாசிச - நாசிச வன்முறைகள் பரவிவந்த நேரம்  அது.  



இந்த கடிதம் எப்படி உங்களுக்கு கிட்டியது ? ஆச்சர்யம் வீரபாண்டியை தொற்றிக்கொண்டது.

பன்னாட்டு அறிவார்ந்த ஒத்துழைப்பு நிறுவனம் 1933 ஆம் ஆண்டு , "போர் ஏன்" என்ற தலைப்பில்  வெளியிட்ட கடித தொகுப்பில் இந்த கடிதம் உள்ளது.

இதற்கும் உங்கள் ஆய்விற்கும் என்ன தொடர்பு உள்ளது மேடம் ? ஒன்றும் புரியாமல் நின்றார் முருகன்.

இங்குள்ள கைதிகள் அனைவரும் குற்றம் இழைத்தவர்கள் என்று  ஏற்கும் நிலையில் ஒரு செய்தியை நாம் ஏற்கத்தான் வேண்டும்.

சட்டத்துக்கும், வன்முறைக்கும் இடையே இன்று வெளிப்படையான முரண்பாடு உள்ளதாக தோன்றலாம், இருப்பினும் ஒன்றில் இருந்துதான் மற்றொன்று உருவாகியது என்று நாம் சிந்தித்து  பார்க்க   வேண்டும். 



ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையே நலன்கள் குறித்து மோதல் ஏற்படும் பொழுது , அது பொதுவில், வன்முறை மூலமாக தீர்த்துக் கொள்ளப்படுகிறது. விலங்குகள் உலகிலும் அப்படித்தான். மனிதன் அதற்கு விதிவிலக்கல்ல.

இருப்பினும், மனிதர்களிடையே கருத்து மோதல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது, அதுபோது அவை மிகவும் உயர்வான சித்தாந்தங்கள் பற்றியவயாகவும் அமைய வாய்ப்புள்ளது. அவற்றை தீர்த்துக்கொள்ள வேறு வேறு முறைகள் தேவை - இந்த முறைகளை    நாம் மேலான முறைகள் என்று காணுகையில் - இவை மனித பரிணாம வளர்ச்சியில் பிற்பகுதியில் தோன்றியவையாகும். 

ஆரம்ப நாட்களில் சிறு சிறு சமூகங்களில் உடைமைகள் பற்றிய பூசல், ஆதிக்க உரிமை போன்றவை முரட்டு பலம் மூலம் தீர்மானிக்கப்பட்டது, பின்னர் வந்த காலத்தில் உடலின் வலிமை அந்த இடத்தை பெற்றது, அடுத்து அடுத்து அதன் வேறு வடிவங்கள் தோன்ற ஆரம்பித்தன.


தொடரும்...... 





என்ன உதவி நான் செய்யனும்.....


மேடம்.... அது ஒன்றும் இல்லை  -சமாளிக்க முயன்றார் வீரபாண்டி 


சும்மா சொல்லுங்க ... பாண்டி , எந்த கைதியின் வாழ்வு முடியப்போகிறது ?


மேடம் , நீங்க ரொம்ப தெளிவா இருக்கீங்க ...


நம்ம ரவி மற்றும் அந்த பள்ளிக்கூட மாணவி கற்பழிப்பு கேசுல தூக்கு தண்டனை உறுதியான, ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்த மூணு பேருக்கும் தூக்கு தண்டனை உறுதியாகிவிட்டது என்று விளக்கினார் வீரபாண்டி 


அய்யோ , முடிஞ்சுபோச்சா ......


அவனுங்க ரொம்ப நம்புநாங்களே... 


எப்படியும் ஜனாதிபதி , குறைந்தது காலத்தை கடத்தவாவது உதவுவார்னு நம்புநாங்களே...


சீக்கிரமா தள்ளுபதி ஆகிவிட்டதா ?


நல்லது , அரசு என்னை  போலத்தான் இயங்குதுன்னு சொல்லுங்க ... பாண்டி.


அக்கா டார்லிங் முகத்தில் மலர்ச்சி.


மேடம், நீங்க ஒரு டாக்டர், ஒரு உயிர் சாகப்போகுது   - வருத்தப் படலனாலும் பரவாயில்லை - இப்படி சந்தோசப்படுவது எதுக்கு டாக்டர் ?


நீங்க ரொம்ப வித்தியாசமான டாக்டர்........