இதுவரை,சப்தமில்லாமல் வந்து படித்துள்ளவர்கள் ....

Friday 27 September 2013

ஆண்களும் பெண்களும் சமூகத்தின் இரண்டு தவிர்க்கமுடியாத பகுதிகள்.
ஆகையினால் இவர்களுள் யார் நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற விவாதம் தேவையற்றது.

இறைவன் அல்லது இயற்கை அல்லது இயற்கையை படைத்த இறைவன், மனிதர்களை சில அடிப்படை இயல்புகளுடன் படைத்துள்ளான்.
பத்து வயதுச் சிறுவர்கள் கூட நம்பத்தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை
விஸ்வாமித்திரர் ஒரு பெண்ணோடு உடல் உறவு கொண்டதை ஏற்கும் நமது சமூகம், இந்த வரியையும் ஏற்கும்.
எல்லாத்துக்கும் சின்னவன்; ஆனா, கல்யாணத்துக்கு மட்டும் பெரியவன்என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. இது பற்றிய அறிவால்தான் நம் பெரியவர்கள் ஆம்பளப் பசங்களோட வெளையாண்டா, காது அறுந்து போகும்என்று பெண் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தார்கள் போலும்.
ஆதிகாலத்தில் நமது முன்னோர் பிள்ளைகளை சொல்லி வளர்த்த முறை தவறு – இப்படியான சொற்றொடர்களை இணையத்தின் உள்ளே நுழைப்பது – பழமைத்தனம்.

 ஒரு பெண்ணோடு பழகும் போது இவள் ஒரு பெண்’  என்கிற நினைவையும் நினைப்பையும் அகற்றி அவளை ஒரு நண்பணைப் பார்ப்பது போல் ஒரு தோழியாக மட்டுமே பார்ப்பவர் ஆண்களில் அரிது என்பதே கசப்பான உண்மை. 
இந்த வரியை கொஞ்சம் மாற்றி,
 ஒரு ஆணோடு பழகும் போது இவன் ஒரு ஆண்’  என்கிற நினைவையும் நினைப்பையும் அகற்றி அவனை ஒரு தோழியாக  பார்ப்பது போல் ஒரு நண்பனாக மட்டுமே பார்ப்பவர் பெண்களில்  அரிது என்பதே கசப்பான உண்மை. 
என்று நான் எழுதினால் , என்னை சமூகம் சும்மா விடுமா ?

ஆண்  இவ்விஷயத்தில் தந்திரமானவன்
ஆண் பெண் இருவருக்கும் காம உணர்வு உள்ளது, ஆண்கள் அந்த உணர்வினை வெளிப்படுத்துவதில் முந்திக்கொள்ள முயல்வார்கள். பல சமயங்களில் இவ்வாறு முந்தும் ஆண்களை பெண்கள் விரும்பி ஏற்பர். முந்தாத ஆண்களை பொதுவாக பெண்கள் குறைவான ஆண்மை உள்ளவர்களாக எண்ணுவர்.

தோதான வாய்ப்பின் போது, எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான்!
மனித சமூகம் பார்ப்பதற்கு மிகவும் நாகரீமகாக  இருப்பினும் அதன் துவக்கம் மிகவும் மோசமானதாகத்தான் இருந்துள்ளது. முடிவும் அப்படியே இருக்குமோ என்று அச்சமாக உள்ளது.
ஏற்கனவே உலக அளவில், ஓர் இனச்சேர்க்கை பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் – அந்த பழக்கம் இந்தியர்களிடையே மெதுவாக பரவி வரும் சூழலில் – ஆண்களையும் பெண்களும் இன்புற்று இருப்பதை ஊக்குவிக்கும் படைப்புகள் தேவை.

ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் காழ்ப்புணர்வுடன் எதிர்கொள்வது ஓர்  இனச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக போய்விட வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment